நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு பாபு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் பாபுவை மீண்டும் திருவனந்தபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்குக்காக கேரள காவல்துறையினர் பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாபுவின் கை விலங்கை காவல்துறையினர் கழட்டியுள்ளனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென பாபு தப்பித்து ஓடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் பாபுவை பிடிப்பதற்காக விரட்டி சென்றுள்ளனர். ஆனால் பாபு காவலர்கள் கையில் சிக்காமல் தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் மற்றும் களியாக்கவிளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.