இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்
என்ற பெயர் ”பூசெட்டி” பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே நிதியமைச்சர் தான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் சமர்பித்தார்.
பின் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1947 நவம்பர் 26ஆம் நாள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். இந்த நாளில் தான் இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கை (அதாவது பட்ஜெட்) சமர்ப்பிக்கப்பட்டது. நேரு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர் கே சண்முகம் செட்டி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சுதந்திரமடைந்து மூன்று மாதங்களே ஆகியிருந்த நிலையில் முதல் பட்ஜெட்டில் எந்த பெரிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. நிதிநிலை ஆய்வு அளவுடன் இது முடிந்துவிட்டது. 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் வெறும் 164 கோடி ரூபாய் தான் அரசின் செலவாக ஒதுக்கப்பட்டது.
1947 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் மாலை 5 மணிக்கு தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் நடைமுறையில் இன்னும் ஏன் பின்பற்ற வேண்டும் என்று கருதிய மத்திய அரசு 2001 ஆம் ஆண்டிலிருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றியது. முதன்முதலில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை ஏற்றார் யஸ்வந்த் சின்கா.
பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாள் அன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் இதையும் பாஜக அரசு மாற்றியுள்ளது. 92 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட நடைமுறை உடைக்கப்பட்டு பொது பட்ஜெட் , ரயில்வே பட்ஜெட் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது.