Categories
Tech டெக்னாலஜி

சென்னையில் ஐபோன் 13 உற்பத்தி ஆரம்பம்….. விலை குறைய வாய்ப்பு…. சூப்பர் தகவல்…..!!!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன்களை சென்னை ஃபாக்ஸான் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளது. மிக அழகான டிசைன், அதிநவீன கேமரா, ஏ15 பயோனிக் சிப் ஆகிய அம்சங்கள் கொண்ட ஐபோன் 13 இந்திய உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக  ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ஆகியவற்றை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12-ஐ இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. இந்நிலையில் மீண்டும் ஃபாக்ஸ்கானில் ஐபோன் 13 உற்பத்தி தொடங்கவுள்ளது.
இந்த உள்ளூர் உற்பத்தி மூலம் சுங்க வரி தவிர்க்கப்படுவதால் ஐபோன் 13 சீரிஸின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |