இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய பாலிசிகள் நிறைய உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று தான் ஜீவன் லாப் பாலிசி. இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 233 ரூபாய் முதலீடு செய்து முதிர்வு காலத்தில் 17 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது பங்குச் சந்தையுடன் தொடர்பற்றது. எனவே இதில் எந்த சிக்கலும் இல்லை.
இவர் சேமிக்கக்கூடிய பணம் பாதுகாப்பாக இருக்கும். உங்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும். சொந்தமாக வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பாலிசி பெரிதும் உதவும். அதனைப்போலவே குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு இந்த பாலிசி பயனளிக்கும். எட்டு வயது முதல் 59 வயதுவரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம்.
இதற்கான முதிர்வு காலம் 16 முதல் 25 ஆண்டுகள். இந்த பாலிசியில் குறைந்தபட்ச உறுதி தொகையாக 2 லட்சம் வரை வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இதில் பிரீமியம் செலுத்த தொடங்கிய பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து கடன் வாங்கும் வசதியும் உள்ளது. நீங்கள் செலுத்தக்கூடிய பணத்திற்கு வரி சலுகையும் உண்டு. பாலிசிதாரர் ஒருவேளை பாதியிலேயே இறந்து விட்டால் அவரது நாம் இன்னைக்கு பாலிசியின் முழு பலனும் கிடைக்கும்.