Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீடுகளை இடிக்குறாங்க…. மாற்று இடம் கொடுங்க… கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…!!

வீடுகளை இடிப்பதால் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், ரோஜாமேடு பின்புறத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி எங்களது வீடுகளை இடித்து வருகின்றனர். இதுவரை 30-க்கும்  அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டு தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாங்கள் அனைவரும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். எங்களுக்கு தற்போது வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |