Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள்”… ரஷ்யா செய்த காரியம்…. லீக்கான தகவல்……!!!!!!

சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ஆக்ரோஷமான போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன்- ரஷ்யா என இருதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் காரணமாக உக்ரைன் மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த போரை நிறுத்தும்படி ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது. எனினும் இருநாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறியதாவது, உக்ரைனின் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்தும் 4 அமைப்புகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்கள் வாயிலாக அழித்துவிட்டோம்.

இத்தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினா் 25 நபர்கள் கொல்லப்பட்டனா். இந்த வான்பாதுகாப்பு அமைப்புகளை ஓா் ஐரோப்பிய நாட்டிடம் இருந்து உக்ரைன் பெற்றிருந்தது என்று கூறினார். இந்த வான்பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா வழங்கியதாக தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. டினிப்ரோ எனும் இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்பே இது போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், காா்கிவ் பிராந்தியங்களிலும் அழித்ததாக ரஷ்யா முன்னா் தெரிவித்து இருந்தது.

Categories

Tech |