இந்தியாவில் மக்கள் புதிய கார்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மாருதி சுஷுகி-யின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளது. அடுத்து மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் 3 இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்து டாடா நிறுவனத்தின் டாடா நேக்ஸன் 14,315 யூனிட்டுகள், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13623 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெசா 12,439 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் கிரேட்டா 10,532 யூனிட்டுகள், டாடா பஞ்ச் 10,526 யூனிட்டுகளும், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியோஒஸ் 9687 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி எக்கோ 9221 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.