இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர்மோடி கூறியதாவது “உக்ரைன் விவகாரம் பல பேரால் கவனம் பெற்ற நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அந்த இந்தியர்களில் பல பேர் மாணவர்கள் ஆவர். உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து இருநாட்டு அதிபர்களுடனும் தொலைபேசி மூலம் உரையாடினேன். அத்துடன் இருவருன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினேன்.
இந்த போர் பதற்றத்திற்கு பேச்சுவார்த்தையின் வாயிலாக தீர்வுகாண வேண்டும். ஆகவே இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையே அமைதிக்கு வழிவகுக்கும். உக்ரைன் விவகாரம் குறித்து எங்களது நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடயிலான நல்லுறவு உலகின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும். இதன் காரணமாக இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும்” என குறிப்பிட்டார்.