Categories
உலக செய்திகள்

“நோ இதை பண்ணாதீங்க”…. நோட்டாவில் இணைய ஆர்வம் காட்டும் பிரபல நாடு…. வார்னிங் கொடுக்கும் ரஷ்யா….!!!!

ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் விளைவாக ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் நோட்டா அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து ஆர்வம் காட்டி வருகிறது. பின்லாந்தில் 30 சதவீதம் மக்கள் மட்டுமே உக்ரைன் போருக்கு முன்னதாக நோட்டாவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டில் 60 சதவீத மக்கள் நோட்டாவில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் பின்லாந்து நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து விவாதம் நடத்தப்பட்டு பின்லாந்து எம்.பி.க்கள் நோட்டாவில் இணையலாமா ? வேண்டாமா ? என்பதை தீர்மானிப்பார்கள். இதற்கிடையே ரஷ்யா, பின்லாந்து நோட்டா அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நோட்டா மோதலை நோக்கிய ஒரு கருவியாகவே உள்ளது என்றும், ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மையை கொண்டுவராது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Categories

Tech |