திருநெல்வேலி மாவட்டம், மலைவாழ் பெண்கள் சாதனை:
பாபநாசம் அருகே மலைவாழ் மக்களில் இருந்து முதன்முதலாக இரண்டு பெண்கள் வன காவலர் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.காணிக்குடியிருப்பை சேர்ந்த பணியில் சேர்ந்து ஜெயா மற்றும் அனுஜா என்ற இரண்டு பெண்களும் பல காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற இரண்டு பெண்களுக்கும் சொந்த மாவட்டமான நெல்லையில், அம்பாசமுத்திரம் வன சரகத்தில் பணி நியமனம் பெற்றுள்ள இந்நிலையில் ஜெயா மற்றும் அனுஜா நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சார்பில் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் 35 மலைவாழ் மக்கள் கலந்து கொண்ட நிலையில், இரண்டு பெண்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.