சினேகா ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியின் நடுவராகவும் பணிபுரிகிறார். இந்நிலையில், இவர் ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.