மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி விதிப்பை கண்டித்தும்,
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனவே உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, நகர் குழு உறுப்பினர் கண்ணன், பழனி, அன்புமணி, நகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது