Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

குற்றவாளிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேய்கருப்பன்கோட்டை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை புலவன்காடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விக்ரம், ராஜேஷ், தினேஷ், சரவணன், கண்ணதாசன், மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் செந்தில்குமாரின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என  கூறி பட்டுக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து செந்தில்குமாரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார்  2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |