மனிதர்களின் உடல் வெப்ப நிலை குறித்த பல்வேறு புதிய தகவல்கள் மருத்துவ உலகில் இருந்த பல பழைய நம்பிக்கைகளை உடைத்து எரிந்துள்ளது.
உலகெங்கும் உயிரியல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இயல்பான உடல் வெப்ப நிலை 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கூறுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அடிப்படை அளவிலிருந்து அளக்கப்படுகிறது. இந்த முறையானது கடந்த 150 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையானது முன்பு இருந்த அளவிலிருந்து 0.29 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட 6 லட்சத்து 70 ஆயிரம் உடல் வெப்பநிலை பதிவுகளை பெற்று மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் வெப்பநிலை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடக் கூடியது என்பதும், மனிதனின் உடல் வெப்பநிலையை அவரது எடை உயரம் உணவு பழக்கம் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் ஆகியவை தீர்மானிக்கின்றன என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தவிர உடல் நோய்கள் பாலினம் வயது ஆகியவை கூட மனித உடல் வெப்பநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக குழந்தைகளின் இயல்பான உடல் வெப்பநிலை 97.50 டிகிரி பாரன்ஹீட் முதல் 100.4 பாரன்ஹீட் வரை உள்ளது. ஆனால் வளர்ந்த மனிதர்களின் உடல் வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை தான் உள்ளன என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.