Categories
மாநில செய்திகள்

TN TRB 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்……!!!!!

தமிழக சட்டசபையில் சென்ற மாதம் 18ஆம் தேதி 2022-23ம் வருடத்துக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாள் (19ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21ம் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் தமிழக சட்டசபை ஏப்ரல் 6 மீண்டும் கூடியது. அவற்றில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. முன்பாக கேள்வி நேரமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தொடரானது மே 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அப்போது நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பொதுமுடக்கம் ஏற்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிக்கி தவித்தனர்.

அத்துடன் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்போது கொரோனா தாக்கம் குறைந்து அனைவரும் இயல்புநிலைக்கு நிரம்பி வருகின்றனர். அதன்படி பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களும் உற்சாகமாக சென்று வருகின்றனர். கொரோனா தாக்கத்திற்கு பின் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பல தரப்பில் இருந்து அரசு பள்ளிகளில் மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் தேர்வு வாரியம், TET தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்புபடி TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இருப்பது, ஆசிரியர் நியமனத்திற்காக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |