Categories
உலக செய்திகள்

கிழக்கு பகுதி முற்றிலுமாக அழியும்…. ரஷ்யாவின் புதிய நகர்வு… பதற்றத்தில் உக்ரைன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் படைகளை குவித்து கட்டாயம் தாக்குதலை மேற்கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யப்படைகளின் இந்த திடீர் நகர்வு, தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியை முற்றிலுமாக அழிக்கும். அது மிகவும் விரைவில் நடக்கும் என்று உக்ரைன் தெரிவித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தாலும் தற்போது வரை சந்திக்காத கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

ரஷ்யா இதற்கு தயாராகி வருவதாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம் எனவும் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். மேலும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியை நோக்கி ராணுவ பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல், டான்பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் ஆயிரக்கணக்கில் குவிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் மக்கள் குறிப்பிட்ட பகுதியை விட்டு உடனே வெளியேறி விடுமாறும் அங்கு பாதுகாப்பு இல்லை என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |