இணையதளத்தில் விளையாடும் சூதாட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முக்கிய பிரமுகர் கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடூர சம்பவம் இதுவே கடைசியாக இருக்கட்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவரை கொடூரமான முறையில் அடித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்!(1/4)#BanOnlineGambling #Vellore
— Dr S RAMADOSS (@drramadoss) April 12, 2022
ஆன்லைன் சூதாட்டத்தினால் மக்களும் குடும்பங்களும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதை எத்தனை நாட்கள் நாம் வேடிக்கை பார்க்க போகிறோம். இதை உடனடியாக தடை செய்யாவிட்டால் கட்டுப்படுத்த முடியாத மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இந்த இணையதள சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.