வட இந்தியாவில் மத பேரணியில் கல்லெறி தாக்குதல் நடத்தியவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டிருக்கிறது.
வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றுள்ளனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 6 போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஹர்ஹென் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வன்முறை மேலும் பரவாமல் இருக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.இதற்கிடையே , மத பேரணி மீது தாக்குதல் நடத்தியதாக இதுவரை 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத பேரணி மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர்களில் வீடுகள் நேற்று முதல் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக ஹர்ஹென் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.முன்னதாக, கல்வீச்சு, வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கைதாகும்.