Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் …. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண்ணிடம் நகையை  பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  பேராசிரியரான  கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று விட்டு அதே பகுதியில் அமைந்துள்ள புறவழிச்சாலையில்  மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக    மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கோமதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கோமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த  புகாரை விசாரித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் நகையை திருடி சென்றது நாகை  மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், ஜவகர், ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 12 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |