பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆ.சண்முகபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் எலிசபெத் ராணி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென எலிசபெத் ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் திருட்டு போன நகையின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து எலிசபெத் ராணி தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.