குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் இருக்கும் காமராஜர் தெருவை சேர்ந்த மாரிமுத்து(75) என்பவர் சீமானூர் சாலையில் இருக்கும் மலையடி குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அவர் குளித்து கொண்டிருக்கும் போது சற்று கால் தடுமாறி குளத்தில் விழுந்து விட்டார். அதன்பிறகு நீர்மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மாரிமுத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.