Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோலாகலமாக நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழா”… நேர்த்திக்கடன் செய்த ஏராளமான பக்தர்கள்…!!!!

ஆதனகோட்டையிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆதன கோட்டையில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் சென்ற 3ஆம் தேதி தேர் திருவிழாவானது காப்புக்கட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று ஆதனக்கோட்டை, மடத்து கடை, பழைய ஆதனக்கோட்டை முதலியவற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதை தொடர்ந்து இரவு வீதி உலாவானது யாளி வாகனத்தில் அம்மன் அருள் புரிந்தார். இதன் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories

Tech |