Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்பிய நாட்டுக் கூத்து பாடல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

நாட்டுக் கூத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதராம ராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், அஜய் தேவகனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதம் ரிலீசாகி 1,000 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்திய அளவில் ரிலீசான தங்கல், பாகுபலி படங்களை அடுத்து மூன்றாவதாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1,000 கோடி வசூல் படைத்துள்ளது. இந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக்கூத்து பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. மேலும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் போல நாட்டுக்குத்து பாடலும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |