கடந்த மார்ச் 21-ஆம் தேதி “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று சீனாவின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 9 பணியாளர்கள், 123 பயணிகள் என மொத்தம் 132 பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து சீனாவில் உள்ள வுசோ என்ற நகரின் அருகே மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 132 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை விமானி இந்த கோர விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்த விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டி ஒன்றிலிருந்து கிடைத்த சில தகவல்களும் இதற்கு இசைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீன அரசு சீன விமானிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு துணை விமானி இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இத்தகைய வதந்திகளை சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் மறுத்துள்ளது.