தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் உதயநிதி இன்று மிகச்சிறந்த சேவைகளை செய்து வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி அமைச்சரானால் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார். நானும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க நடவடிக்கை எடுப்பார். அதற்காக நான் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.