ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கசையடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலியை தொடர்ந்து டெக்சிஸ்டெபக் நகரில் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடந்துள்ளது.
இதில் சிலர் சிவப்பு உடையணிந்து சாத்தான் போல் வேடமிட்டு அங்கு நின்று கொண்டிருந்த மக்களை சாட்டையால் அடித்துள்ளனர். இதன்மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.