நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட் (35). 2021-2022 பருவத்திற்கு பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2020 வரை ஒரு டெஸ்ட், 19 ஒரு நாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பென்னட் விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். மேலும் 79 முதல் தரப் போட்டிகளில் 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Categories