Categories
உலக செய்திகள்

அப்படி போடு…. உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி….நோக்கியா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

ரஷிய படைகள் உக்ரைன் மீது போரின் தாக்கம் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி  வருகின்றன. 

ரஷ்ய சந்தையில் இருந்து, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் 5ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமுமான நோக்கியா வெளியேறுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள், ரஷ்யாவிலிருந்து தங்கள் சேவையை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வருகின்ற நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் நோக்கியா நிறுவனமும் இணைந்துள்ளது. இதையடுத்து பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா, தனது மொத்த வணிகத்தில் 2 சதவீதம் மட்டுமே ரஷியாவின் பங்களிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆண்டு வர்த்தகத்தில், இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |