உக்ரைன் ரஷ்யா போரானது நாற்பத்தி எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் காரணமாக உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உக்ரேன் விவகாரம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகம் தற்போது புதிய பிரச்சினை சந்தித்துள்ளது. உலகின் உணவு கையிருப்பு தீர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபருடன் நான் பேசியபோது அவரும் இந்த பிரச்சினை குறித்து பேசினார். உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் நாளை முதல் உலகிற்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்று நான் அவரிடம் கூறினேன் .
நம்முடைய நாட்டு மக்களுக்காக உணவு வழங்க ஏற்கனவே நம்மிடம் போதிய அளவு உணவு உள்ளது. ஆனால் நம்முடைய விவசாயிகள் உலகிற்கு உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் உலக நாடுகளுக்கு உணவு வினியோகம் செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு எப்போது அனுமதி அளிக்கும் என்பது குறித்து தெரியவில்லை என்று பேசியுள்ளார்.