மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஆதி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் மின்னல் தாக்கி கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.