Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாண்டி தனது நண்பர்களான சசி, வசந்த் ஆகியோருடன் தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சேட்டிலைட் சிட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த சசி பாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக பாண்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசி மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |