Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்?….. அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிகாகல்வித்துறை அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின் போது கல்வித்துறைக்கு 37,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 6-ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை மீதான விவாதத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளனர். அதன்பிறகு இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் விளக்கமளித்தனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்கள்  பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என காத்திருந்தனர். தற்போது அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் 12,000 பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல் படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் விவாத நேரத்தின் போது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதாக தகவல்கள் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 9,494 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Categories

Tech |