விஜய் தான் நிஜ வாழ்கையில் எப்படி என நேர்காணலில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்புடன் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து விடுவார். விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தனது விடா முயற்சி மற்றும் திறமையின் மூலம் வெற்றி கண்டார்.
விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது நடனம் ஆடுவது என தனக்குள் பன்முகத் திறமைகளை வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் சன் டிவியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு நேர்காணலில் விஜய் பங்கேற்ற போது தான் நிஜ வாழ்க்கையில் எப்படி என கூறியுள்ளார். போக்கிரி படத்தின் கதாபாத்திரமும் பீஸ்ட் படத்தின் கதாபாத்திரமும் இணைந்ததுதான் நான் எனவும் போக்கிரி மற்றும் பீஸ்ட் படத்தில் வரும் என்னுடைய கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையிலும் ஒத்துப்போவதாக இருக்கிறது என கூறியுள்ளார்.