Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(13.4.22) மின்தடை…. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (13.04.2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி: முப்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை ( புதன் கிழமை ) நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காவல்கிணறு மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை, குருசடி, குமாரபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் , காற்றாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்தத் தகவலை முப்பந்தல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை மின் வினியோகம் இருக்காது. குறிப்பாக மேலவீதி, வடக்குவீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மானோஜியப்பா விதி, எல்லையம்மன் கோயில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங் கடைத்தெரு, நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை சாலை, சிரேஸ் சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 5 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது.

விருதுநகர்: ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. ஆதலால் இ்ந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

Categories

Tech |