மாணவர்கள் பட்டப்படிப்பை கல்லூரிக்கு சென்றோ அல்லது தொலைதூர கல்வி முறையிலோ ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டும் படித்து வந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்று யூசிஜி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி மாணவர்கள் தொலைதூர கல்வி முறையிலோ ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதி நேரமாகவோ இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பை மட்டுமே படிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.