Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகள்”…. வீடியோ மூலம் பதிலளித்த பீஸ்ட் பட ஹீரோயின்…!!!!

ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் பூஜா ஹெக்டே.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இத்திரைப்படமானது பிரம்மாண்டமாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என பூஜா ஹெக்டே திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் படத்தில் தன்னுடைய பெயர் ப்ரீத்தி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நான் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. படம் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புவதாகவும் விஜயுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார். ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் பட குழுவினரை விஜய் அழைத்துச் சென்ற வீடியோவானது அனைவரையும் கவர்ந்துள்ளது.

Categories

Tech |