Categories
மாநில செய்திகள்

மக்களே இனி அலுவலகம் போக வேண்டாம்…. வீட்டில் இருந்த படியே…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. அதனால் மக்களின் அனைத்து சேவைகளும் மிக எளிதில் முடிந்துவிடுகின்றன. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

ஆதார் அடையாள அட்டையை ஆவணப்படுத்தி, பழகுனர், ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி ஏமாற்றுதல் ஆகிய சேவைகளை இனி இணையதளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இதன் மூலம் மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வரும் சிரமம் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய சேவை தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |