Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ரூ. 1,77 ,500 வரை சம்பளம்…. ”கெத்தன அரசு வேலை”…. TNPSC குரூப் 1 அறிவிப்பு …!!

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணிகள் :

துணை ஆசிரியர் பணி – 18

துணை காவல் கண்காணிப்பாளர் – 19

வணிக வரி உதவி ஆணையர் – 10

கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 14

அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ரூரல் டெவெலப்மெண்ட் – 07

தீயணைப்பு மீட்புதுறை மாவட்ட அதிகாரி – 01

மொத்தம் – 69 காலி பணியிடங்கள்

முக்கிய தேதிகள் : 

இத்தேர்வுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2020

முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி : 05.04.2010, காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை.

முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஊதியம் : 

குறைந்தபட்சமாக ரூ 56, 100 முதல் அதிகபட்சமாக ரூ. 1,77 ,500 வரை மாத ஊதியமாக  வழங்கப்படும்.

தேர்வு கட்டணம் : 

நிரந்தரப் பதிவில் பதிவு செய்யாத விண்ணப்பக் கட்டணம்  ரூபாய் 150

முதல் நிலை தேர்வு கட்டணம் ரூபாய் 100

முதன்மை தேர்வுக்கான கட்டணம் ரூபாய் 200

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் , மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

குறிப்பு : ஆன்லைனில் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும்.

வயது வரம்பு :

(01.07.2020 அன்றுக்குள் ) உதவியாளர் ஆணையர் தவிர மற்ற

பணிகளுக்கான வயது : 21 முதல் 52 வரை

உதவியாளர் ஆணையர் பணிக்கான வயது : 21 முதல் 32 அல்லது 33 வரை

குறிப்பு : எஸ்.சி /எஸ்.டி /பி.சி /எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் –  வயது வரம்பில் தளர்வு உண்டு .

கல்வித்தகுதி : 

குறைந்தபட்சமாக ,  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் , ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பிலும், அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பிலும்  தேர்ச்சி அவசியம்

குறிப்பு : பணிகளுக்கேற்ப கல்வித் தகுதியில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும்முறை : 

டிஎன்பிஎஸ்சி-யின்  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

உடல்தகுதி : துணை காவல் கண்காணிப்பாளர் , தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி போன்ற பணிகளுக்கு உடற்தகுதி அவசியம்.

Categories

Tech |