பென்ஷனர்கள் மற்றும் முதியோர்களுக்கு தனி இணைய தளம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்த இணையத்தளம் பென்ஷனர்களுடன் தொடர்பில் இருக்கும் என்றும் அவர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்க வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். பென்சனவர்கள் பயன் பெறுவதற்காக தனி இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என பென்ஷன் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். பென்ஷன் வாங்குவோர் தங்கள் குறைகளை டிஜிட்டல் வகையில் தெரிவிக்கவும் அதிகாரிகளை சந்திக்காமல் குறைகளை தீர்த்துக் கொள்ளவும் இந்த பென்ஷன் இணையதளம் உதவியாக இருக்கும்.
பென்ஷன் வழங்குவது தொடர்பான அனைத்து அமைச்சகங்களும் இந்த இணையத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்துக் குறைகளும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிஜிட்டல் வாழ்வு சாலைகள் திட்டம் 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 3,08,625 வாழ்வு சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.