Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிக்குவானா சைக்கோ இளைஞன்… பரபரப்பான சி சி டி வி… காட்சி…!!!

கோயம்புத்தூரில் சைக்கோ இளைஞன்,  பெண்களின் ஆடைகளை திருடுவது,  படுக்கை அறைகளை பார்ப்பது போன்ற சைக்கோவின் தொடர் அட்டகாசத்தால் குடியிருப்புவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் கோவை, துடியலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் சைக்கோ நபர் ஒருவன்  படுக்கை அறை  ஜன்னலை குறிவைத்து பார்ப்பதாக   புகார்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பான  சி சி டிவி , காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள், துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் போன்றவற்றை சைகோ ஒருவன் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சைக்கோ திருடனை  இதுவரை  கைது செய்யப்படாத நிலையில் படுக்கைய அறையை நோட்டமிட்ட அதே   சைக்கோவின் கைவரிசைதான் இதுவோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |