Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு”…. மூத்த தலைவர் பவன் குமாா் பன்சால் விசாரணைக்கு ஆஜர்…..!!!!

நேஷனல்ஹெரால்டு பணமோசடி வழக்கு குறித்த விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பவன்குமாா் பன்சால் அமலாக்கத்துறை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானதாக அதிகாரிகள் கூறினர். மத்திய தில்லி பகுதியிலுள்ள அமலாக்கத்துறையின் புதிய தலைமை அலுவலகத்துக்கு இவ்வழக்குக்குத் தொடா்புடைய பெரும்பாலான ஆவணங்களுடன் காலை 10:30 மணிக்கு அவா் ஆஜரானாா். இதற்கிடையில் விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு முன்பாக இந்த பணமோசடி வழக்கு பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிா்ககட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற திங்கள்கிழமை 5 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் காங்கிரஸ் தலைவா் சோனியா, அவருடைய மகன் ராகுல் காந்தி போன்றோர் இயக்குநா்களாகவுள்ள “யங் இந்தியா” அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை சென்ற 2010ல் விலைக்கு வாங்கியது. இவற்றில் மிகப்பெரிய அளவில் பணமோசடி நடைபெற்று இருப்பதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த பணமோசடி பற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் “யங் இந்தியா” அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் பத்திரிக்கையை வெளியிடும் அசோசியேட்டட் ஜோ்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிா்வாக இயக்குநராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராகவும் உள்ள பன்சால் (73) போன்றோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது.

அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு இருவரும் ஆஜராகினா். அப்போது நிறுவனபங்குகள் பகிா்வு குறித்த விபரங்கள், நிதி பரிவா்த்தனைகள், யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவன விளம்பரதாரா்களின் பங்கு போன்றவை தொடர்பாக இருவரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன் யங் இந்தியா அமைப்பின் மற்ற விளம்பரதாரா்களும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை விரைவில் அழைப்பாணை அனுப்ப இருக்கிறது எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

Categories

Tech |