உக்ரைனில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை கைவிடப்போவதில்லை என்று அங்குள்ள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் நாட்டில் மைகோலைவ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இதுதான் ஐரோப்பாவிலேயே மிக சிறந்த உயிரியல் பூங்கா என கருதப்படுகின்றது.
இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் அங்குள்ள விலங்குகள் அச்சத்தில் தவித்து வருகின்றது. இந்த விலங்குகளை கைவிடப் போவதில்லை என உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.