சமையலறையை நவீன மாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார் டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது(ஆண்டு நிகர வருமானம் 3 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் ). குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் வரம்பு, சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 60 வயது. மற்றவர்களுக்கு 55 வயது.
மார்ஜின் தொகை 15% முதல் 20%. குறைந்தபட்ச கடன்தொகையாக ரூ.50,000 மும் அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் 12.25% மூன்றாவதாக, காப்பகங்களை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படுகிறது . இந்தக் கடன்பெற பட்டதாரியாக இருக்க வேண்டும். வயது வரம்பு 21-55. குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 50,000. கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
மேலும், நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. மார்ஜின் தொகை ரூ.1 ல ட்சத்துக்கு 15சதவிகிதமும், ரூ.1 லட்சத்துக்கு மே ல் வழங்கப்படும்தொகை க்கு 23 சதவிகிதமுமாக உள்ளது. வட்டி 12.25%. நான்காவது திட்டமாக, பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு 20 -60 வயது. குறைந் தபட்சகடன் தொகை ரூ .50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10லட்சம் வரையில் வழங்கப்படும்.
அதே சமயம் கிராமம் மற் றும் சிறிய நகரங்களுக் கு ரூ.5 லட்சம் வரை வழ ங்கப்படுகிறது. மார்ஜின் தொகையாக ரூ.2லட்சம் வரையி லான கடனுக்கு 15 சதவிகிதமும், ரூ.2 லட்சத்துக்கு மேலான கடன் தொகைக்கு 25 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . வட்டி விகிதம் 12.25 சதவிகிதமாகும்.