நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி விழா இரு வேறு நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எந்த நாளில் நேர்த்தி கடன் நிவர்த்தி பண்ண வேண்டும் என்றும் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
திருக்கணித முறையில் ஜனவரி 24ம் தேதி சனிப்பெயர்ச்சி என்றும் வாகிய பஞ்சாங்கத்தில் டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்று குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பத்திற்கு காரணம்.
ஆனால் வாகிய பஞ்சாங்கத்து படி டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சனிப் பெயர்ச்சியை ஒரே நாளில் குறிப்பிட்டிருந்தால் பக்தர்களுக்கு எந்த குழப்பமும் ஏற்பட்டு இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.