தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் உணவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் 6,162 முழு நேர கடைகளுக்கும் 773 பகுதிநேர கடைகளுக்கும் கட்டடம் கட்ட வேண்டியுள்ளத்தாகவும் மிக விரைவாக இதற்கான பணிகள் துவங்கும் என்றும் கூறினார்.