Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின்கசிவு தான் காரணமா….? ஓட்டு வீட்டில் தீ விபத்து…. பொருட்கள் எரிந்து நாசம்….!!

ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் கூத்தும் பாளையத்தில் உள்ள ஆலாம்பாளையத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் ராதாமணி. இந்நிலையில் அவருடைய ஓட்டு வீட்டில் நேற்று எதிர்பாராத விதமாக  தீப்பற்றியது. இது குறித்து ராதாமணி சென்னிமலை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |