சீன செல்போன் தயாரிப்பு நிறுவனம் சியோமியின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் மனுகுமார் ஜெயினுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இப்போது சியோமி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள மனு குமார் ஜெயின், அந்நியச் செலவாணி முறைகேடு குறித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்குள் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு ஜெயின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
முன்பாக வருமானவரி ஏய்ப்பு செய்த குற்றம் குறித்து சியோமி அலுவலகத்தில் சென்ற வருடம் டிசம்பரில் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையில் அமலாக்கத்துறை சிலகுறிப்பிட்ட தகவல்களின்படி கடந்த பிப்ரவரியில் சியோமி நிறுவனத்திற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் வணிக நடைமுறைகள் இந்திய அந்நியச் செலாவணி சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களை விசாரணையின்போது ஜெயின் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் சியோமி நிறுவனம் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மற்றும் சீனாவிலுள்ள அதன் தாய் நிறுவனம் போன்றவற்றுக்கு இடையில் தற்போதுள்ள வணிக கட்டமைப்புகளையும் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.