Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!…. தங்கையிடம் அத்துமீறிய அண்ணன்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு(50) திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது முதல் மனைவி கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கணவரிடம் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதையடுத்து விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்தார். அவருக்கு 12 வயது சிறுமியுள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விடுவது வழக்கம் ஆகும். கொரோனா காரணமாக 12வயது சிறுமி பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதல் மனைவியின் மகன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய்-தந்தையருக்கும் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டனர். பின் நிறைமாதம் கர்ப்பிணியான சிறுமிக்கு சென்ற 2 தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோர் பிரசவத்திற்காக நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவ்வாறு 12 வயது சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது தொடர்பாக சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின்அண்ணனே அவரை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |