சரியாகப் படிக்கவில்லை என்று கூறி சிறுவனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை, பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி டெய்சி ராணி. இந்த தம்பதிகளுக்கு சச்சின் (6) என்ற மகன் உள்ளார். சச்சின் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் சச்சின் சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் கடுமையாக சிறுவனை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலினால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளியில் இருந்த சச்சினை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு.வி.க நகரில் உள்ள காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.