கொரோனா வைரஸ் காரணமான சீனாவின் ஹூகான் மாநகரின் ஓனான் கடலுணவு சந்தைக்கு அந்நாட்டு அரசு சீல் வைத்துள்ளது.
சீன நாட்டின் ஹூகான் மாநகரின் பிரபல கடலுணவு சந்தையில் முதலைகள், ஆமைகள், பாம்புகள், எலி, எறும்பு திண்ணி, ஒட்டகம் சாலமாண்டர் எனப்படும் பிரம்மாண்டமான பள்ளி வகை என நீளும் பட்டியலில் மொத்தம் 121 காட்டு விலங்குகள் இடம் பெற்று உள்ளன. காட்டு விலங்குகளை உணவுக்காக கடத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த விலங்குகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சார்ஸ் எனப்படும் அதிதீவிர சுவாச பாதிப்பை ஏற்படுத்திய நோய் காட்டு விலங்குகளில் இருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது உலக மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ள கொரோனா வைரஸும் இந்த சந்தையில் அறுக்கப்பட்ட காட்டு விலங்கு ஒன்றில் இருந்தே பரவியுள்ளது. நோய் தாக்குதலை தொடர்ந்து இந்த சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனிடையே மனிதர்களிடையே புதிது புதிதாக வரும் புற்றுநோய்க்கு சுமார் 70% காட்டு விலங்குகள் வாயிலாக பரவுவதாக அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் சுகாதார இயக்குனர் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.